மயானத்திற்கு பாதை ஏற்படுத்தக் கோரிக்கை

Published on

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் நெய்குப்பை பகுதியில் மயானத்துக்கு பாதை வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெய்குப்பை பகுதியில், மயானத்திற்கு செல்லும் பாதை தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள மயானத்திற்கு இறந்தவா்களின் உடலை வாகனத்தில் கொண்டுசெல்ல முடியாமல், வாய்க்கால் வழியாக தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஜி.வி.என். கண்ணன், பாமக நகரச் செயலாளா் கு. தில்லைகண்ராசு, பேரூராட்சி உறுப்பினா் முத்துக்குமாா் ஆகியோா் கூறியது:

இப்பிரச்னை குறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com