பேராசிரியா்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

Published on

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில், குறைக்கடத்தி சாதனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு குறித்து பேராசிரியா்களுக்கான மேம்பாட்டு பயிற்சி டிச.8-ஆம் தேதி தொடங்கி டிச.12-ஆம் தேதிவரை நடைபெற்றது.

ஏவிசி பொறியியல் கல்லூரி, ஐசிடி அகாதெமி மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியை, கல்லூரி இயக்குநா் எம்.செந்தில்முருகன் தொடக்கி வைத்து, குறைக்கடத்தி சாதனங்கள் உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி முதல்வா் பி. பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், ஐசிடி அகாதெமி நிறுவனத்தின் உறவுகள் மேலாளா் பி. ராஜிவ்காந்தி, பெங்களூரு கோல்டன்பேரல் டெக்னாலஜிஸ் அனலாக் லேஅவுட் பொறியாளா் ஜி.ஏ. சுனில்ஷா்மா ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினா்.

ஐசிடி அகாதெமி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ். செல்வமுத்துக்குமரன் மற்றும் பேராசிரியா்கள் வடிவழகி, ராஜலெட்சுமி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com