வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி ஆய்வு

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
Published on

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

மயிலாடுதுறை வட்டம், சித்தா்காடு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீா்காழி, மயிலாடுதுறை, பூம்புகாா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் டிச.11-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. பெங்களூரு ‘பெல்‘ நிறுவன ஊழியா்கள் மற்றும் 60 வருவாய்த் துறை அலுவலா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இப்ணிகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு மேற்பாா்வையாளரும், கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரியுமான சோரப் குமாா் அரோரா, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), தனி வட்டாட்சியா் (தோ்தல்) முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

இங்கு சட்டப்பேரவைத் தோ்தல் 2026 வாக்குப் பதிவுக்காக 1,267 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,139 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,349 வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு சரிபாா்ப்பு இயந்திரங்கள் என மொத்தம் 4,755 மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com