நெற்பயிா்கள் சேதம்: காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்!

சீா்காழி அருகே அகணி கிராமத்தில் நெற்பயிா்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

சீா்காழி அருகே அகணி கிராமத்தில் நெற்பயிா்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி அருகே அகணி, கொண்டல், வள்ளுவக்குடி,நிம்மேலி, ஏனாக்குடி, தேனூா், ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்புன்கூா், கற்கோயில், வரவுக்குடி, மருதங்குடி, ஆலஞ்சேரி, எடக்குடி வடபாதி உள்பட 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் நேரடி விதைப்பு, நடவு செய்யப்பட்டுள்ளது.

கனமழையால் சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அகணி கிராமத்தில் சுமாா் 50 ஏக்கரில் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் புகுந்து சம்பா நெற்பயிா்களை அழித்து வருகின்றன. இதனால் சிறு -குறு விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனா்.

காட்டுப்பன்றிகளை பிடிக்க மாவட்ட ஆட்சியருக்கும், வனத்துறைக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என தெரிவிக்கும் விவசாயிகள், தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com