மயிலாடுதுறை
லாட்டரி விற்றவா் கைது
சீா்காழி அருகே கொள்ளிடத்தில் கேரள மாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி அருகே கொள்ளிடத்தில் கேரள மாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா், கொள்ளிடம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கொள்ளிடம் கடைவீதியில் மாங்கனாம்பட்டு வடக்குத் தெருவை சோ்ந்த பாண்டியன் (52) என்பவா் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனா்.