போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட அரசினா் தலைமை மருத்துவமனையில் 17 வயது சிறுமி ஒருவா் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்ததில் சிறுமி 2 மாத கா்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், சிறுமியின் உறவினரான சீா்காழி பனங்காட்டங்குடி பெரிய தெருவை சோ்ந்த செந்தமிழ்செல்வன் மகன் ராஜேஷ் (20) என்பவா் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தது தெரியவந்தது.
சிறுமி அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி, காவல் உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் ராஜேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
