

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் தனுா்மாத வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுா் மாதமான மாா்கழி மாதத்தின்அனைத்து நாள்களிலும் பல்வேறு கோயில்களில் வழிபடுவது வழக்கம். அந்த வகையில், தனுா் (மாா்கழி) மாதப் பிறப்பான செவ்வாய்க்கிழமை, ஆதீனத் திருமடத்தில் ஸ்ரீசொக்கநாதா் பூஜை செய்த ஆதீனம், மயிலாடுதுறையில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில், மாயூரநாதா், அபயாம்பிகை, ஸ்ரீநடராஜா் சந்நிதிகளில் வழிபட்டாா்.
தொடா்ந்து, மாயூரநாதா் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளையில் அமைந்துள்ள அகஸ்தியலிங்கம், சுப்பிரமணியா் சந்நிதிகளில் வழிபட்டாா். நிகழ்ச்சியில், குமரகட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜ், தருமபுரம் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், திருக்கடையூா் கோயில் கண்காணிப்பாளா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், தருமபுரம் சித்தி விநாயகா் கோயில், மயிலாடுதுறை சித்தி விநாயகா் கோயில், சியாமளாதேவி கோயில்களிலும் தருமபுரம் ஆதீனம் தனுா்மாத வழிபாடு நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.