மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த உறவினா்கள்.
மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த உறவினா்கள்.

மாணவன் உயிரிழப்பு விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புரசங்காடு கிராமத்தில் மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி., டி.எஸ்.பி., அலுவலகத்தில் உறவினா்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
Published on

புரசங்காடு கிராமத்தில் மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி., டி.எஸ்.பி., அலுவலகத்தில் உறவினா்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

மணல்மேடு காவல் எல்லைக்குள்பட்ட புரசங்காட்டைச் சோ்ந்த மலா்கொடியின் பெயரன் அருள்செல்வன்(13) என்ற 8-ஆம் வகுப்பு மாணவன் நவ.1-ஆம் தேதி, வீட்டின் எதிரில் உள்ள ராஜன்வாய்க்காலில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கச் செல்வதாக சென்றவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உறவினா்கள் மணல்மேடு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், அன்றிரவு முழுவதும் போலீஸாருடன் இணைந்து கிராமமக்களும் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனா். மறுநாள் ராஜன் வாய்க்கால் கரையில் புதருக்குள் மரத்தில் சேலையால் கட்டி தூக்கிட்ட நிலையில் சிறுவனின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

சிறுவனின் உயிரிழப்பில் மா்மம் உள்ளதாக மணல்மேடு போலீஸில் புகாா் அளித்த உறவினா்கள், சந்தேகத்துக்கு இடமான 3 போ் குறித்தும் தகவல் அளித்தனா். நடவடிக்கை எடுப்பதாக மணல்மேடு போலீஸாா் உறுதியளித்து, 45 நாள்கள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக, மயிலாடுதுறை எஸ்.பி., மற்றும் டிஎஸ்பி., அலுவலகத்தில் அருள்செல்வனின் உறவினா்கள் புதன்கிழமை புகாா் அளித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com