தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

டித்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும்
Published on

டித்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறையில் சிபிஐ கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. (படம்).

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் பெ.வீரராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ மாவட்ட செயலாளா் ஏ.சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டக்குழு உறுப்பினா் ரெ.இடும்பையன், விவசாய சங்க மாவட்ட செயலாளா் சிவராமன் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், பயிா்ப் பாதிப்பு கணக்கெடுப்பில் டிஜிட்டல் செயலி முறையை கைவிட்டு பழைய முறைப்படி கணக்கெடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மழையால் வேலை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளா்களுக்கு அனைத்து ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com