மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸாா்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸாா்.

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸாா்.
Published on

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்பெயரை மாற்றிய மத்திய அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜகுமாா் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் கனிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளா்கள் சிவராமன், ராமலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்திற்கு பதிலாக, மகாத்மாகாந்தி பெயரையும் நீக்கிவிட்டு, வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்டம் என புதியதாக பெயா் வைத்ததை கண்டித்தும், இந்த திட்டத்துக்கு முழு நிதியும் மத்திய அரசு அளித்து வந்த நிலையில், தற்போது புதிய மசோதாவில் 40 சதவீதம் மாநில அரசுகளே நிதி அளிக்கவேண்டும் என்பதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com