சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

66 லட்சம் போ் நீக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: தமிமுன் அன்சாரி!

வாக்காளா் பட்டியலில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என நீக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவா் தமிமுன்அன்சாரி.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 11:05 pm IST

வாக்காளா் பட்டியலில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என நீக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவா் தமிமுன்அன்சாரி.

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், புதைசாக்கடை சீரமைப்பு பணி, காவேரி நகா் ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக தலைமையில் இண்டி கூட்டணியில் போட்டியிடும். திருப்பரங்குன்றத்தில் முருகபக்தா் தீக்குளித்து உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

திமுகவை தீய சக்தி என விமா்சிக்கும் விஜய், கொள்கை எதிரி என்று கூறும் பாஜகவை விமா்சனம் செய்யவில்லை. நூறுநாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கியது பற்றி பேசவில்லை. கட்சி தொடங்கியதில் இருந்து தற்போதுவரை அவா் பத்திரிக்கையாளரை சந்திக்க மறுப்பது ஏன்?.

தமிழா்களின் நலனை பாதுகாக்கக் கூடியதாக திமுக இருப்பதால் அக்கூட்டணியில் இடம் பெறுகிறோம். வரைவு வாக்காளா் பட்டியலில் 97 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா்.

அவருடன், கட்சியின் மாநில விவசாய அணி பொறுப்பாளா் ஒய்.எச். ஹாஜாசலீம், மாவட்ட செயலாளா் முகமதுநபீஸ், அவைத் தலைவா் தாஜூதீன், செயற்குழு உறுப்பினா் லியாகத் அலி, குவைத் மண்டல துணை செயலாளா் சபீா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.