டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்கள் போராட்டம்

டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்கள் போராட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மண்டல அலுவலகப் ஊழியா்கள்
Published on

மயிலாடுதுறை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மண்டல அலுவலகப் ஊழியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொதுமேலாளா் (நிா்வாகம்) ஊழியா்களை தரக்குறைவாக நடத்துவதுடன், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் பொன்.நக்கீரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி அலுவலகம் முன் அவா்கள் வாயிற்கூட்டம் நடத்தினா் (படம்).

X
Dinamani
www.dinamani.com