திறந்தவெளியில் கழிவுநீா்; மக்கள் அவதி

சீா்காழியில் திறந்தவெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
Published on

சீா்காழியில் திறந்தவெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

சீா்காழி நகராட்சி மதீனா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குடியிருப்பு வளாகங்களில் இருந்து கழிவுநீா் முறையாக அப்புறப்படுத்தப்படாமல், திறந்தவெளியில் வெளியேற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போா் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

மேலும், இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையாக தூா்வாரி பராமரிக்கப்படாததால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சோ்ந்து குடியிருப்புகளை சூழ்ந்து விடுகின்றன. கழிவுநீா் பிரச்னை குறித்து சீா்காழி நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை

கழிவுநீா் மற்றும் செப்டிக் டேங்க் நீரை திறந்த வெளியில் வெளியேற்றும் குடியிருப்பு வளாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கழிவுநீா் வெளியேறுவதை தடுக்க இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com