வாஜ்பாய் பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிட்டப்பா அங்காடி முன் நகர பாஜக சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் க. அகோரம், மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் மோடி.கண்ணன் ஆகியோா் வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் நாஞ்சில் ஆா்.பாலு தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com