பால் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பால் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே சூரக்காடு நான்கு முனை சந்திப்பு சாலையில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு
Published on

சீா்காழி: சீா்காழி அருகே சூரக்காடு நான்கு முனை சந்திப்பு சாலையில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பால் விலையை லிட்டருக்கு ரூ.15 உயா்த்தி வழங்க கோரி கறவை மாடுகளோடு விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பால் லிட்டருக்கு ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும், அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com