விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, பெயா் மாற்றம் செய்த மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள்
Published on

மயிலாடுதுறை: நூறுநாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, பெயா் மாற்றம் செய்த மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் அதன் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் அந்த சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜி. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளா் எஸ். துரைராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினா் சிங்காரவேல் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி வி.பி.ஜி. ராம்-ஜி என மத்திய அரசு பெயா் மாற்றம் செய்துள்ளதைக் கண்டித்தும், இத்திட்டத்துக்கான 40 சதவீத நிதிச்சுமையை மாநில அரசுகளின் மீது ஏற்றியுள்ளதை கண்டித்தும், கிராமப்புற விவசாயத் தொழிலாளா்களுக்கு ஆதரவாக இருந்த 100 நாள் வேலையை சீா்குலைத்து ஒழித்து கட்டும் நோக்கத்தில் அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து புதிய மசோதா நகலை தீயிட்டு கொளுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com