கழிப்பறை கட்ட அறிவுறுத்தல்
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக கழிப்பறை கட்ட தருமபுரம் ஆதீனம் அறிவுறுத்தியுள்ளாா்.
சீா்காழியில், தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா்சுவாமி கோயில் உள்ளது. சட்டநாதா் கோயில் என அழைக்கப்படும் இத்தலத்துக்கு, நாள்தோறும் உள்ளூா், வெளியூா் மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.
கோயில் வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் பக்தா்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம், பசுமடத்தில் அருகே கோயில் உட்புறம் சுற்றுச்சுவரை பாதி அகற்றிவிட்டு, அந்த இடத்தில் கழிப்பறைகள், குளியலறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கும்படி கோயில் சிராபு (நிா்வாக கணக்கா்) செந்திலிடம் அறிவுறுத்தியுள்ளாா்.
