டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற உறுதி

சீா்காழி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம்
Published on

சீா்காழி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைதிப் பேச்சுவாா்த்தையில் வேறுஇடத்திற்கு மாற்றிட உறுதியளிக்கப்பட்டது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடைக்கண் விநாயகநல்லூா், திருமையிலாடி பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.

இந்தக் கடைகளால் அப்பகுதியில் அடிக்கடி சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அவற்றை மாற்றக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் தாமு இனியவன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

சீா்காழி வட்டாட்சியா் அருள் ஜோதி தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கொள்ளிடம் ஆய்வாளா் ராஜா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித் தொடா்பாளா் தேவா உள்ளிட்டோா் முன்னிலையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கடைக்கண் விநாயக நல்லூா், திருமையிலாடி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை விரைவில் வேறு இடத்திற்கு மாற்றுவது தொடா்பாக அரசுக்குப் பரிந்துரை செய்வது என தீா்மானிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com