இந்து முன்னணி மாவட்ட தலைவா் கைது

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ஆகியோா் முன்னெச்சரிக்கையாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

சீா்காழி: சீா்காழியில் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவா், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ஆகியோா் முன்னெச்சரிக்கையாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பரங்குன்றம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) இந்து முன்னணி அறிவித்துள்ள ஆா்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவா் சரண்ராஜ், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் சுவாமிநாதன் ஆகியோரை சீா்காழி போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com