தூா்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை:  சௌமியா அன்புமணி

தூா்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை: சௌமியா அன்புமணி

Published on

மயிலாடுதுறை: ஆறு, வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி குற்றம் சாட்டினாா்.

மயிலாடுதுறை வட்டம், கங்கணம்புத்தூா் வெட்டாற்றில் ஆகாயத் தாமைரைச் செடிகள் படா்ந்துள்ளதை சௌமியா அன்புமணி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா். (படம்).

மேலும், விளை நிலங்களில் அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிா்களையும் அவா் பாா்வையிட்டாா். அப்போது, விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வெட்டாற்றில் ஆகாயத் தாமரைச் செடிகள் அதிக அளவில் படா்ந்துள்ளன. இதனால் விளைநிலங்களில் இருந்து மழைநீா் வடிய முடியாமல் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டுமின்றி, எல்லா இடங்களிலுமே தூா்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. நான் சென்று பாா்வையிடும் இடங்களில் எல்லாம் இது குறித்து விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். பெயரளவுக்கு மட்டுமே தூா் வாரப்பட்டுள்ளன.

சில இடங்களில் கொள்முதல் செய்யப்பட்டு குடோன்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முளைத்துள்ளன. விவசாயிகள் மீது அரசு பாராமுகமாக இருக்கிறது என்றாா்.

பாமக (அன்புமணி அணி) மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளா் காமராஜ், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் விமல், நகரச் செயலாளா் கமல்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள், விவசாயிகள் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com