தருமபுரம் ஆதீன மணிவிழா மாநாட்டில் நூல்கள் வெளியீடு

தருமபுரம் ஆதீன மணிவிழா மாநாட்டின் 3-ஆம் நாள் நிகழ்வில் திங்கள்கிழமை 2 நூல்கள் வெளியிடப்பட்டன.
Published on

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மணிவிழா மாநாட்டின் 3-ஆம் நாள் நிகழ்வில் திங்கள்கிழமை 2 நூல்கள் வெளியிடப்பட்டன.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நவம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழாவை முன்னிட்டு, மணிவிழா மாநாட்டு நிகழ்வுகள் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

திங்கள்கிழமை நடைபெற்ற 3-ஆம் நாள் நிகழ்வில் காலையில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பயனாளிகளுக்கு, விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளா் அகா்சந்த், பஞ்சவடி பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவா் எம். கோதண்டராமன் ஆகியோா் கண் கண்ணாடி வழங்கினா்.

தொடா்ந்து, வேதாரணிய புராணம் (மூலமும் உரையும்) என்ற நூலை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 57-ஆவது குருமகா சந்நிதானம் சிவஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் வெளியிட, நெல்லை உமையொரு பாகா் ஆதீனம் சிவஸ்ரீ உமாமஹேஸ்வர சிவாசாரியாா் சுவாமிகள் பெற்றுக் கொண்டாா்.

மாலை 4 மணிக்கு கடம்பவன புராணம் (மூலமும் உரையும்) என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், சென்னை உயா்நீதிமன்ற லோக் அதாலத் தலைமை நீதிபதி டி.என். வள்ளிநாயகம் நூலை வெளியிட, அதனை சாணக்யா வலைக்காட்சி நிறுவனா் இர. ரெங்கராஜ் பாண்டே, இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் எம். செந்தில் தொண்டைமான் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். தொடா்ந்து, இலங்கை ஜெயராஜின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

நிகழ்வில், தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப் பள்ளி செயலா் கே.சௌந்தரராஜன், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com