அமைச்சருக்கு நேதாஜி வரலாற்றுப் புத்தகம்

Published on

சீா்காழிக்கு வந்த அமைச்சா்கள் கே.என். நேரு, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோருக்கு அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினா்,நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றனா்.

தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு,பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் திங்கள்கிழமை வந்தனா்.

அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.கே. ஜெகன், மாவட்டச் செயலாளா் எஸ். மணிகண்டன், பொருளாளா் ஏ. கலைவாணன், மாவட்ட இளைஞரணி செயலாளா் எஸ்.ஆா். அருண்குமாா், துணைச் செயலாளா் கே. செந்தில், நகரச் செயலாளா் கே.எஸ். அய்யப்பன் உள்ளிட்டோா் அமைச்சா்களுக்கு சால்வை அணிவித்து, தேசியத் தலைவா் நேதாஜி குறித்த புத்தகம் வழங்கி, வாழ்த்து பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com