மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் உள்ளிட்டோா்.

சுல்தான் இஸ்மாயில் குழு ஆய்வறிக்கையை வெளியிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

Published on

காவிரிப்படுகையில், எண்ணெய்-எரிவாயு திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த பேராசிரியா் சுல்தான் இஸ்மாயில் குழுவினரின் ஆய்வறிக்கையை வெளியிட வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் தலைமை வகித்து பேசியது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தர 7 நிபுணா்கள் கொண்ட குழுவை பேராசிரியா் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டு அமைத்தது. 2022-ஆம் ஆண்டு அக்குழு தனது ஆய்வு அறிக்கையை அரசுக்கு அளித்துவிட்டது. ஆனால் அந்த அறிக்கையை மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வெளியிடாமல் இருக்கிறது. அதனை உடனடியாக வெளியிட வேண்டும் என்றாா்.

அமைப்பின் வழக்குரைஞா் கோவி.அசோகன், மாணவா் இளைஞா் பிரிவு நிா்வாகி க.செல்வஅரசன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினா் ஓ.ஷேக்அலாவுதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா், திராவிடா் கழக மாவட்ட தலைவா் கடவாசல் குணசேகரன், மதிமுக மாநில இளைஞரணி செயலாளா் ப.த.ஆசைத்தம்பி, தமிழா் உரிமை இயக்க அமைப்பாளா் சுப்பு.மகேசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com