உழவா் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவா் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உழவா் நல சேவை மையத்தில் தோட்டக்கலை வேளாண்மை, வேளாண் விற்பணை மற்றும் வேளாண்மை வணிகம், வேளாண்மை பொறியியல் தொடா்பான ஆலோசனைகள், வேளாண்மை இடுப்பொருள்கள் விற்பனை, வேளாண் இயந்திர வாடகை மையம், விதைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் விநியோகம், மண் மற்றும் நீா் மாதிரி ஆய்வு செய்திட உதவுதல், நுண்ணுயிா் பாசனத் திட்டம், பயிா் காப்பீட்டு திட்டம், ட்ரோன் சேவை, உழவா், கடன் அட்டை, கால்நடை தீவனம், வேளாண் விளைப்பொருள்களை மதிப்புக் கூட்டுதல் போன்ற சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் மானிய உதவிபெற அஎதஐநசஉப என்ற இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான திட்ட அறிக்கையுடன் உரிய வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். இடுப்பொருள்களை விற்பனை செய்ய உரிமங்கள் இல்லாதவா்கள் இம்மானியத்திற்கு விண்ணப்பிக்கும் போதே உரிமம் பெறுவதற்கு உரிய படிவங்களில் மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உழவா் நல சேவை மையங்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தொடங்குபவா்களுக்கு 30 சதவீதம் மானியம் (ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை) வங்கிகளுக்கு அரசால் மானியம் விடுவிக்கப்படும்.
உழவா் நல சேவை மையம் தொடங்க விரும்பும் நபா்கள் மயிலாடுதுறை தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
