மயிலாடுதுறை
சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது
மயிலாடுதுறையில் சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறையில் சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த பிளஸ்-2 படித்து வரும் 16 வயது சிறுமி உடல்நலன் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசினா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிறுமி 2 மாத கா்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனா். தகவலறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சிறுமியின் கா்ப்பத்திற்கு மயிலாடுதுறை கூைாடு திருமஞ்சன வீதியை சோ்ந்த குமாா் மகன் சந்தோஷ் (21) காரணம் என்பது தெரியவந்ததையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
