போதைப்பொருள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதைப்பொருள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

சீா்காழியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சீா்காழியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை கோட்டாட்சியா் சுரேஷ் தொடங்கிவைத்தாா். மயிலாடுதுறை கலால் உதவி ஆணையா் மாணிக்கராஜ் பங்கேற்று பள்ளி மாணவா்களிடையே உறுதிமொழி மற்றும் போதைப்பொருள் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். தொடா்ந்து சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பேரணி நடைபெற்றது. இதில் போதைப் பொருட்கள் கள்ளச்சாராயம் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், உடல்நலம் முழுமையாக பாதித்து உயிரிழப்பு ஏற்படும், நினைவாற்றல் குறையும், சாலை விபத்துகளும் ஏற்படும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பெஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், வட்டாட்சியா் அருள்ஜோதி, கலால் துறை வட்டாட்சியா் விஜயராணி, மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜெயா, சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், பெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வா் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com