தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

Published on

கொள்ளிடம் அருகே நல்லூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன், கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலா் மற்றும் கணக்கு உதவியாளா் ஆகியோரின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் கலா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் இளவரசன், பொதுச் செயலாளா் சண்முகம், மாநிலத் துணைத் தலைவா் பைரவநாதன், மாநிலச் செயலாளா்கள் ரவி, ராமநாத கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று கோஷம் எழுப்பினா். மாநிலச் செயலாளா் வளா்மாலா, மாவட்ட பொருளாளா் ஜவகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com