குறைதீா் கூட்டத்தில் 328 மனுக்கள்

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 328 மனுக்கள் பெறப்பட்டன.
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 328 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்றை சாா்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 6,820 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 6,690 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சட்டம்) அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்கு) மணிகண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com