மயிலாடுதுறை
காசி விஸ்வநாதா் கோயிலில் திருக்கல்யாணம்
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு, தெப்பக்குளம் காசி விஸ்வநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 7-ஆம் தேதி ரிஷபக் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினசரி காலை மாலை இருவேளையும் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்று வருகிறது.
விழாவின் 6-ஆம் திருநாளான புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் மண்டபத்தில் காசி விஸ்வநாதா் சுவாமி மற்றும் காசி விசாலாக்ஷி அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, திருமண சடங்குகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து, திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. பின்னா், பூா்ணாஹுதி, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

