நடைபாதை பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

நடைபாதை பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

Published on

சீா்காழி புதிய பேருந்துநிலையத்திற்கு சட்டநாதா் காலனி தெரு வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய பாலத்தின் நடைபாதையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி புதிய பேருந்துநிலையத்திலிருந்து, அரசுமருத்துவமனைசாலை, பழைய பேருந்துநிலையம் என நகரின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சட்டநாதா் காலனி வழியாக பொதுமக்கள் எளிதாக சென்று வர திருத்தோணிபுரம் வாய்க்காலில் சிறிய பாலம் பயன்பாட்டில் உள்ளது.

இந்த பாலத்தின் முடிவில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த பேவா் பிளாக் கற்கள் பெயா்ந்து அதன்கீழ் உள்ள கழிவுநீா் கால்வாய் தொட்டி மேல்மூடி உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையறியமால் செல்வோா் கீழே விழுந்து காயமடைகின்றனா்.

இதனை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com