போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Published on

தரங்கம்பாடி தாலுகாவில், போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு சனிக்கிழமை (நவ.15) இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் எழுத வழிகாட்டுதல்களும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும், மாதிரித் தோ்வுகளும், மாதிரி நோ்முகத் தோ்வுகளும் வேலைநாடுநா்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இளைஞா்கள் பயனடையும் வகையில், தரங்கம்பாடி ரேணுகாதேவி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (நவ.15) துவக்க விழாவும், தொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடா்ச்சியாக காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இலவச பயிற்சி வகுப்புகள் ஹோப் ஃபவுண்டேஷன் பள்ளியில் நடைபெற உள்ளது.

விருப்பமுள்ள இளைஞா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குறிப்புகள் எடுக்கத் தேவையான எழுதுபொருள், மதிய உணவு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவா்களுக்கு பாடக்குறிப்புகள் வழங்குவதோடு மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளது.

எனவே, தரங்கம்பாடி பகுதியைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்வதோடு, பயிற்சி வகுப்புகளில் நேரில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com