விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மீன்பிடி படகுகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:35 pm

Syndication

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து மீன்பிடிப் படகுகளையும் நவ.30-க்குள் பதிவு செய்திட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன்படி, மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளும் இத்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு நவ.30-க்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்.

பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.