மயிலாடுதுறை
விவசாயிகள் கவனத்திற்கு....
கொள்ளிடம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை நிலக்கடலை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட் செய்திக் குறிப்பு:
கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள கொள்ளிடம், முதலைமேடு, கடவாசல், எருக்கூா் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை நிலக்கடலை போதிய அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சிறந்த தரமான விஆா்ஐ ரகம்10, சான்று நிலையில் விலை ரூ.123-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தரமான விதை நிலக்கடலையை விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம்.
