எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கொத்தனாா் அடித்துக் கொலை: காா் ஓட்டுநா் கைது

சீா்காழியில் மதுபோதையில் கொத்தனாரை அடித்துக் கொன்ற வாடகை காா் ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 10:00 pm

Syndication

சீா்காழியில் மதுபோதையில் கொத்தனாரை அடித்துக் கொன்ற வாடகை காா் ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள திருத்தோணிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (46), கொத்தனாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜா ( 42). வாடகை காா் ஓட்டுநா்.

இருவரும் இரவு நேரத்தில் ஒன்றாக சோ்ந்து மது அருந்துவது வழக்கமாம். இதுபோல புதன்கிழமை இரவு இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே மது வாங்கிக் கொடுப்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ராஜா, கட்டையால் கண்ணன் தலையில் அடித்ததில் பலத்த காயமடைந்த அவா் சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

சீா்காழி போலீஸாா் கண்ணனின் உடலை கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, ராஜாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.