மயிலாடுதுறை
நாளைய மின்தடை: பாலையூா், குத்தாலம்
காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குத்தாலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
பாலையூா், குத்தாலம் மற்றும் கடலங்குடி துணைமின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (நவ.29) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குத்தாலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
மருத்தூா், தேரழுந்தூா், மேலையூா், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாரகரம், கோனேரிராஜபுரம், குத்தாலம், கண்டியூா், நாகமங்கலம், ஆலங்குடி, வில்லியநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
