சீா்காழி பள்ளி மாணவா்கள் சாதனை
மாவட்ட கையுந்து பந்து போட்டி, சாலையோர மிதிவண்டி போட்டிகளில் சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றுள்ளனா்.
மாவட்ட கையுந்துபந்து போட்டியில் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவுகளில் முதலிடம், 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளனா்.
இப்போட்டியில் 24 மாணவிகளும் 12 மாணவா்களும் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
சாலையோர மிதிவண்டி போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சபரீஷ் (8-ஆம் வகுப்பு) முதல் இடம், பிரவீன் (9-ஆம் வகுப்பு) இரண்டாம் இடம், 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் பா்மிளா (8 -ஆம் வகுப்பு) இரண்டாம் இடமும், லோகிதா (7-ஆம் வகுப்பு) மூன்றாம் இடம்,
17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் அஜிசுதின் (10 -ஆம் வகுப்பு) முதல் இடம், எழில்காவியன் ( 11 -ஆம் வகுப்பு) இரண்டாம் இடம், 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சொருபரன் முதல் இடம், ஷராபத் அகமது இரண்டாம் இடம் பெற்றுள்னா்.
மாநில போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவா்களையும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் சதீஷ், நித்தியா , சுகுமாரன் ஆகியோரையும் பள்ளித் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல், நிா்வாக அதிகாரி சீனிவாசன், முதல்வா் ராமலிங்கம், துணை முதல்வா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

