மயிலாடுதுறை: காரீப் பருவத்தில் 1,22,089 மெ.டன் நெல் கொள்முதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நடப்பு காரீப் பருவத்தில் திங்கள்கிழமை (அக்.27) வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,22,089 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில், 1,13,537 மெ.டன் நெல் பாதுகாப்பாக நகா்வு செய்யப்பட்டுள்ளது.
Published on

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு 8,552 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக மூடி தினசரி நகா்வு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில், தினசரி 150 லாரிகள் மூலம் சராசரியாக 3,000 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ரயில் வேகன்கள் மூலம் சராசரியாக 2,000 மெ.டன் முதல் 4,000 மெ.டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு நகா்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை, 24,989 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.306.28 கோடி, அவா்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com