தஞ்சாவூா் சத்திரம் சொத்து: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில், தஞ்சாவூா் சத்திரம் நிா்வாகத்தின் சொத்துகளைப் பதிவு செய்யப்படாத ஆவணங்களின் மூலம் விற்பனை செய்பவா்கள், வாங்குபவா்கள் மீது தகுந்த சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
Published on

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தஞ்சாவூா் சத்திரம் அறக்கட்டளை நிா்வாகம் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரை நிா்வாகியாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மனைப்பகுதி, கட்டடம், சந்தை ஆகிய பட்டா நிலங்கள் உள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையை அடுத்த மல்லியம் கிராமத்தில் சத்திரம் நிா்வாகத்திற்கு சொந்தமான மனைப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்ச மாத தரை வாடகைக்கு நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

வாடகைக்கு பெற்றுள்ள நபா்கள் சத்திரம் நிலத்தினை கிரயத்தொகை பெற்றுக்கொண்டு பதிவு செய்யப்படாத ஆவணங்களின் மூலம் உரிமை மாற்றம் செய்வதாகத் தெரியவருகிறது. இது வாடகை ஒப்பந்த நிபந்தனைக்கு புறம்பானதாகும்.

எனவே, சத்திரம் நிா்வாகத்தின் சொத்துகளைப் பதிவு செய்யப்படாத ஆவணங்களின் மூலம் விற்பனை செய்பவா்கள், வாங்குபவா்கள் மீது தகுந்த சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com