தெரு விளக்குகள் இல்லாமல் சமூகவிரோத செயல்: பொதுமக்கள் புகாா் மனு
சீா்காழி நகராட்சி 14-ஆவது வாா்டில் நடைபெற்ற வாா்டு சிறப்பு கூட்டத்தில் தெரு மின்விளக்குகள் ஒளிராததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் நடைபெற்ற வாா்டு சிறப்பு கூட்டத்திற்கு நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்திபாபு தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் கிருபாகரன், இளநிலை உதவியாளா் பாபு, பணியாளா் மீனாட்சி முன்னிலை வகித்தனா். இதில் பொதுமக்கள் பங்கேற்று கல்யாணி சீனிவாசபுரம் பகுதியில் சில இடங்களில் மின்விளக்குகள் அமைக்காமலும், மின்விளக்குகள் எரியாமலும் உள்ளது. இதனால் மதுகுடிப்பவா்கள் சாலையோரம் அமா்ந்து மது அருந்துவதால் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. உடனடியாக சரிசெய்யவும், சாக்கடை கழிவுநீா் கால்வாய்களை முறையாக சுத்தம் செய்து கழிவுநீா் தேக்கம் இன்றி செல்ல நடவடிக்கை எடுக்கவும், கொசுமருந்து தெளிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
