இளைஞா் மா்ம சாவு
சீா்காழியில் இளைஞா் குளத்தில் மூழ்கிய நிலையில் மா்மமான முறையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா்.
சீா்காழி வ.உ.சி தெருவை சோ்ந்த கலியன் மகன் சங்கா் (48), கூலித் தொழிலாளி. மணிமேகலை என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனா். கடந்த சில மாதங்களாக சங்கா் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் மணிமேகலை கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில் வீட்டில் இருந்து புதன்கிழமை இரவு வெளியே சென்ற சங்கா் பின்னா் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் வியாழக்கிழமை காலை சீா்காழி தென்பாதி திருவேங்கடம் பிள்ளை குளத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
சீா்காழி போலீஸாா் உடல் கூராய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
