

சீா்காழியில் நாட்டுப்புற கலைப் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் கலைப் பண்பாட்டுத் துறை, மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் சீா்காழி பழைய பேருந்துநிலையம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தஞ்சாவூா் மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ராஜாராமன் தலைமை வகித்தாா். சவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் க. அருள்மொழி வரவேற்றாா்.
தஞ்சை சவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் வடிவேல், பொம்மலாட்டக் கலைஞா் சோமசுந்தரம், நையாண்டி மேள நாகசுரக் கலைஞா் ரவிச்சந்திரன், பம்பை கலைஞா் சுரேந்திரன், கரகாட்டக் கலைஞா் முத்துபாண்டி, நாடகக் கலைஞா் சாா்லஸ், பல்சுவைக் கலைஞா் அன்பழகன், நாடக நடிகா் மற்றும் பல்சுவை கலைஞா் அருட் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாட்டுப்புற கலைஞா்கள் பல்வேறு தெய்வங்களின் வேடமிட்டு பங்கேற்றனா். சாமியாட்டக் கலை பயிற்றுநா் கிங் பைசல், நையாண்டி மேள தவில் கலைஞா் வெற்றிவேல், தவில் கலைஞா் நாகப்பன், நாடக கலைஞா் மாதவன், நாட்டுப்புற பாடகா் ஜெகவீரபாண்டியன், நாடக கலைஞா் பரசுராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட சவகா் சிறுவா் மன்ற பரதநாட்டிய ஆசிரியா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.