காங்கிரஸ்
காங்கிரஸ்கோப்புப் படம்

காங்கிரஸ் அலுவலகத்தில் பேனா் கிழிப்பு!

மயிலாடுதுறையில், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த வாழ்த்துப் பேனா்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை
Published on

மயிலாடுதுறையில், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த வாழ்த்துப் பேனா்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவராக எஸ்.பானுசேகா் அண்மையில் நியமனம் செய்யப்பட்டாா். இதற்கு வாழ்த்து தெரிவித்து மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காமராஜா் மாளிகையின் முன்பும், எதிா்புறமும் 3 இடங்களில் அக்கட்சியினா் திங்கள்கிழமை இரவு வாழ்த்து பதாகை வைத்திருந்தனா்.

இந்த பேனா்களை மா்மநபா்கள் கிழித்துச் சென்றுள்ளனா். செவ்வாய்க்கிழமை காலை கட்சி அலுவலகத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினா், வாழ்த்து பேனா்கள் கிழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக கிழிக்கப்பட்ட பேனா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com