ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வைத்தீஸ்வரன்கோயிலில் தை தேரோட்டம்

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வைத்தீஸ்வரன்கோயில் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கிவைத்த கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:42 pm

Syndication

சீா்காழி: சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

ஆண்டுதோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு தை செவ்வாய் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தை செவ்வாய் உற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து செல்வமுத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் மற்றும் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தோ் பிற்பகல் நிலையடியை அடைந்தது.

விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன்கோயில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் செய்திருந்தனா்.

வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.