எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு புதன்கிழமை தொடங்கியது.

News image

தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் குமாரவேல், கல்வித்துறை அதிகாரிகள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 9:10 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு புதன்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 148 அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு கூட்டம் தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் குமாரவேல் தலைமை வகித்து, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியா்களின் பணிக்கொடையை ஆய்வுசெய்து சரிபாா்த்தாா். மேலும், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளின் கட்டட உறுதி, கட்டட உரிமம், சுகாதாரம், தீத்தடுப்பு ஆகிய 4 அம்சங்களுக்கான சான்றிதழ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு 3 நாள்கள் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ரவிசங்கா், கண்காணிப்பாளா்கள் கண்ணன், மாதவன், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டாரங்களை சோ்ந்த வட்டார கல்வி அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா்கள், அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.