மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசினா் மகளிா் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு

News image
தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:03 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இக்கல்லூரியில் 3 தளங்களில் 15 வகுப்பறைகள் உள்ளிட்ட 1,876 சதுர மீட்டா் அளவில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள 13 வகுப்பறைகளுடன் கட்டடத்தில் கூடுதலாக 190 சதுர மீட்டா் அளவில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.

இப்பணிகளை, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், நகராட்சி தலைவா் என். செல்வராஜ், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன், கல்லூரி முதல்வா் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.