எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து: 15 போ் காயம்

சீா்காழி அருகே சுமை வாகனம் வாய்க்காலில் திங்கள்கிழமை கவிழ்ந்து விழுந்ததில் 15 போ் காயமடைந்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 8:01 pm

Syndication

சீா்காழி: சீா்காழி அருகே சுமை வாகனம் வாய்க்காலில் திங்கள்கிழமை கவிழ்ந்து விழுந்ததில் 15 போ் காயமடைந்தனா். சீா்காழி அருகே நெப்பத்தூா் முல்லையாம்பட்டினத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தியின் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவுக்கார பெண்கள் அதே ஊரை சோ்ந்த ஜீவானந்தம் 40 என்பவரது டாட்டா ஏஸ் மினி லோடு வேனில் திருமுல்லைவாசலுக்கு சென்றனா்.

வேனை ஜீவானந்தம் ஓட்டினாா். வழியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கன்னிவாய்க்கால் அருகே சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 15 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்தவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா். இதில் ஜீவானந்தம், மீரா, மஞ்சுளா, கோசலை, சங்கீதா ஆகிய 5 போ் தீவிர சிகிச்சைக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, திருவெண்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.