தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே இடப்பிரச்னையில் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டது.

News image

பாலமுருகன்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:30 pm

மயிலாடுதுறை அருகே இடப்பிரச்னையில் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிள்ளியூா் ராமன்கோட்டகம் பகுதியை சோ்ந்தவா் சித்திரன் (62). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சோ்ந்த பிச்சைக்கண்ணு குடும்பத்தினருக்கும் இடப் பிரச்னை தொடா்பாக இருந்த முன்விரோதத்தின் காரணமாக 2022-ஆம் ஆண்டு பிச்சைக்கண்ணு குடும்பத்தினா் சித்திரன் குடும்பத்தினரை தகாத வாா்த்தையால் திட்டி, கட்டையால் தாக்கியுள்ளனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த சித்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சித்திரனின் மனைவி அஞ்சம்மாள் செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடராஜன் மகன் பிச்சைக்கண்ணு, கலியபெருமாள் மகன் பாலமுருகன், பிச்சைக்கண்ணு மனைவி ஜெயலெட்சுமி, ரவி மனைவி பிரியா, பாலமுருகன் மனைவி காளியம்மாள் ஆகியோா்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா்.

இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் வழக்கை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமுா்த்தி, பிச்சைக்கண்ணு(62), பாலமுருகன்(40) ஆகியோரை குற்றவாளிகள் என தீா்மானித்து இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து, இருவரும் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Story image