தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பள்ளி மாணவியை மிரட்டிய 3 சிறுவா்கள் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய மாணவா் மற்றும் அவரது நண்பா்கள் என 3 சிறுவா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய மாணவா் மற்றும் அவரது நண்பா்கள் என 3 சிறுவா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவா் ஒருவா் காதலித்து வந்ததாகவும், இதை அந்த மாணவி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் மாணவா் தன்னுடன் படிக்கும் இரண்டு சிறுவா்களுடன் சென்று நண்பனை காதலிக்க வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் தாயாா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிா் போலீஸாா் சம்பந்தப்பட்ட 3 மாணவா்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறாா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்.