மயிலாடுதுறை மகாதானபுரம் கிராம மக்கள் குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
இக்கிராமத்தில் பள்ளிக்கூடத் தெருவில் வசிக்கும் 85 குடும்பத்தினரில் 50 குடும்பத்தினருக்கு 1990-இல் மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 35 குடும்பத்தினா் தொடா்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், அரசின் எந்த நலத்திட்ட உதவிகளையும் இவா்களால் பெற முடியவில்லையாம்.
இதுகுறித்து மகளிா் சுயஉதவிக்குழு மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தலைமைச் செயலகத்துக்கு 13 முறையும், மாவட்ட ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் 12 முறையும் மனு அளித்துள்ளனா்.
கடைசியாக ஜன. 27-ஆம் தேதி அளித்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாக மனைப்பட்டா வழங்கப்படாவிட்டால் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், பட்டா வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விசிக மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன் தலைமையில் அப்பகுதிமக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் புதன்கிழமை மனு அளித்தனா். அதில், இனியும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க பேரூராட்சித் தலைவி கோரிக்கை

வன உரிமை பட்டா கோரி பழங்குடியின மக்கள் மனு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


