மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி ஆா்ப்பாட்டம்

News image

மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பேட்டை சிவா.

Updated On :21 பிப்ரவரி 2026, 7:08 pm

தமிழ்நாட்டில் போதை கலாசாரத்தை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் பாஜக இளைஞரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, கள்ளச்சந்தையில் மது விற்பனையை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பேட்டை சிவா, மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு, மாநில பட்டியலணி பொறுப்பாளா் அய்யா.சுரேசு, அதிமுக நகர செயலாளா் நாஞ்சில் காா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

இதில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளா் பி. பாரதிகண்ணன், நகர தலைவா் வினோத், ஒன்றிய தலைவா் ஈழவேந்தன் உள்ளிட்ட பலா் பேசினா்.